×

தமிழகத்தில் தட்டுப்பாட்டை போக்க இந்தோனேஷியா, சீனாவிலிருந்து 2 கப்பல்களில் 90,000 டன் யூரியா உரம் காரைக்கால் வந்தது.!

நாகை: தமிழகத்தில் உரத்தட்டுப்பாட்டை போக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இதன்படி சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து 2 கப்பல்களில் 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு நேற்று வந்தது. இந்த உரத்தின் தரம் மற்றும் கப்பலில் இருந்து இறக்குமதி செய்வது, பேக்கிங் செய்வது ஆகியவற்றை நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த சீரிய முயற்சியால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளின் பயன்பாட்டிற்காக 2 கப்பல்கள் மூலம் 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 30 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 60 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 30 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவில் ஆயிரத்து 500 மெட்ரிக் டன் யூரியா மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் எஞ்சியுள்ள யூரியாவை பிற மாநிலங்களுக்கு 10நாட்களுக்குள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரம் விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்ய வசதியாக அந்தந்த மாவட்டங்களுக்கு ரயில்கள் மூலமாகவும், சாலை மார்க்கமாகவும் சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது சென்னை வேளாண்மை துறை துணை இயக்குநர் (உரங்கள்) ஷோபா, வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) குமரன், வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) அரவிந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்….

The post தமிழகத்தில் தட்டுப்பாட்டை போக்க இந்தோனேஷியா, சீனாவிலிருந்து 2 கப்பல்களில் 90,000 டன் யூரியா உரம் காரைக்கால் வந்தது.! appeared first on Dinakaran.

Tags : Indonesia ,China ,Tamil Nadu ,Stalin ,China, ,
× RELATED இந்தோனேசியாவில் கனமழை வெள்ளத்திற்கு 37 பேர் பலி